கொரோனா வைரஸ் நிதியத்துக்கு இதுவரை 140 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நிதியத்துக்கு இதுவரை 140 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதியம் மார்ச் 23ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான ஆரம்ப முதலாக 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்தில் இருந்து ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

இதனையடுத்து தளதா மாளிகை நிர்வாகம் மற்றும் அஸ்கிரிய பீடம் என்பன 20 மில்லியன் ரூபாவை வழங்கின.

இலங்கை நிர்வாக சேவை சம்மேளனம் 2.5 மில்லியன் ரூபாவையும், ஜனாதிபதி செயலகம் 2 இலட்சம் ரூபாவையும் இலங்கை பொறியியலாளர் சம்மேளனம் 6-5 மில்லியன் ரூபாவையும், ஆனந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கம் 2.5 மில்லியன் ரூபாவையும், இலங்கை நிபுணத்துவ சம்மேளனம் 1 மில்லியன் ரூபாவையும் பொதுசேவை பொறியியலாளர் சங்கம் 3 மில்லியன் ரூபாவையும் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் 1 மில்லியன் ரூபாவையும், முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 5 மில்லியன் ரூபாவையும் இந்த நிதியத்துக்கு இதுவரை அளித்துள்ளனர்.

இதேவேளை இந்த நிதியத்துக்கான இலங்கை வங்கியின் கணக்கிலக்கம் (85737373) அறிவிக்கப்பட்டுள்ளது.