பிரதமரின் விசேட அறிக்கை இன்று மாலை வெளியிடப்படவுள்ளதாக அறிவிப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த விசேட அறிக்கையானது இன்று இரவு 7.45 மணிக்கு அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலமை, நெருக்கடியை தணிப்பதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை உள்ளிட்ட விடயங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் தற்போது வரையில் சுமார் 180 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்கியுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.