கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மெய்யான விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் - மனோ கணேசன்

Report Print Kamel Kamel in அரசியல்
240Shares

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மெய்யான விபரங்கள் நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் பீ.சீ.ஆர் கருவிகளை சீன அரசாங்கம் வழங்குவதற்கு நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுமார் இருபதாயிரம் பீ.சீ.ஆர் கருவிகளை சீனா வழங்குவதற்காக நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி கூடுதலான பரிசோதனைகள் நடாத்தப்படுவதனையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மெய்யான புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.