அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஏமாற்றியுள்ளது

Report Print Steephen Steephen in அரசியல்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை ஏமாற்றியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சாதாரண மருத்துவர்களின் தொழிற்சங்கமே அன்றி தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் அல்ல என ஒன்றின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சஙகத்தினர், கொழும்பு தேசிய காய்ச்சல் மருத்துவமனை மற்றும் தொற்று நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்களின் தகவல்களை திருடிச் சென்று, ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஏமாற்றியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிக்கும் பணிகளை தொற்று நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்களிடம் கையளித்து விட்டு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமக்குரிய பணிகளை செய்ய வேண்டும் எனவும் ருக்ஷான் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறையினருடன் கலந்தாலோசிக்காமல் அவர்களின் இணக்கமில்லாமல் வெளியிடப்பட்டுள்ளதாக சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த சுற்றறிக்கையின்படி தாம் வசிக்கும் மாவட்டத்தில் இருந்து வெளியேறிய வேறு மாவட்டத்தில் இருந்து வீடு திரும்பிய எந்தவொருவரையும் தனிமைப்படுத்த தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் கொவிட்19 ஆபத்து பிரதேசமாக கண்டறியப்பட்ட பிரதேசமும் உள்ளடங்குகிறது. அத்துடன் நடைமுறையில் குறிப்பிட்ட மக்கள் குறைந்த ஆபத்தை கொண்ட இடங்களில் ஆபத்தை தவிர்க்கும் முகமாக பொதுசுகாதார அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சுற்றறிக்கை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களும் தமது சம்மேளன உறுப்பினர்களும் குழம்பி போயுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை காரணமாக பாரிய பின்விளைவுகளுக்கு ஏதுக்கள் உள்ளன.

எனவே ஏற்கனவே தமது சம்மேளனம் முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி பின்விளைவுகளை தவிர்க்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.