கொரோனா ஒழிப்பு போர்வையில் சர்வாதிகாரத்தை கட்டியெழுப்பும் திட்டம் - சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்
236Shares

கொவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் ஒழிப்பு என்ற போர்வையில் அரசியல் சர்வாதிகாரத்தை கட்டியெழுப்பும் திட்டமும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்று நேற்று நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொற்று நோய் ஒன்று பரவும் நிலைமைக்குள் மொழி, சமய வேறுபாடுகள் மாத்திரமல்லாது அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து, ஜனநாயக வரையறையை ஏற்றுக்கொண்டு, கொரோனாவை ஒழிப்பதற்காக மனித சமுதாயம் கூட்டாக செயற்படுவது கொள்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக எமது தேசிய, சமய அல்லது அரசியல் வேறுபாடுகள் மற்றும் வழிபாடுகளை கைவிட வேண்டியதில்லை. எனினும் நோயை ஒழிக்க வேண்டுமாயின், நாம் அனைவரும் வாழ வேண்டுமாயின், எதிர்காலத்தில் பல்லின சமூக கலாசாரங்கள் இருக்க வேண்டுமாயின் மனிதர்கள் என்ற அடிப்படையில் நாம் விசேட முறையின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.

அத்துடன் முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூகத்தின் மற்றும் நபர்களின் மொழி, சமய கலாசார மற்றும் அரசியல் சிந்தனைகளை மதிக்க இதனை வாய்ப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

கொரோனாவை ஒழிப்பதற்கு மொழி, சமயம் மாத்திரமல்ல, ஜனநாயகமும் அவசியமில்லை என்ற கருத்து பரவி வருகிறது. கொரோனா ஒழிப்பு என்ற போர்வையில் அரசியல் சர்வாதிகாரத்தை கட்டியெழுப்பும் திட்டமும் இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக் கூடாது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.