பிரதமருடனான சந்திப்பில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கவுள்ள த.தே.கூ

Report Print Ashik in அரசியல்
68Shares

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நாளை திங்கட்கிழமை இடம் பெறவுள்ள விசேட சந்திப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு கலந்து கொள்ள உள்ளது.

குறித்த கலந்துடையாடலின் போது முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நாளை திங்கட்கிழமை இடம் பெறவுள்ள விசேட சந்திப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக அவரிடம் இன்று (3) வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாகவும் எமது மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தலில் முப்படையினருடைய முகாம்கள் எங்களுடைய பிரதேசத்திலே மக்கள் செறிந்து வாழுகின்ற இடங்களில் காணப்படுகின்ற நிலை உள்ளது. குறித்த விடயம் தொடர்பாகவும் ஆராயப்பட உள்ளது.

குறிப்பாக விவசாயிகளின் பிரச்சினை, மீனவ சமூகத்தின் பிரச்சினை, சிகையலங்கார தொழிலாளர்களின் பிரச்சினை, அன்றாட கூலி வேலை செய்கின்ற மக்களின் பிரச்சினை, தற்போதைய பொருட்களின் விலைவாசி காரணமாக அரச உத்தியோகத்தர்களும் கஸ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினை, விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை உரிய விலைக்கு விற்க முடியாமை தொடர்பில் உள்ள பிரச்சினை, மீனவர்கள் தமது கடல் உணவு பொருட்களை சத்தைபடுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் பிரச்சினை, மாணவர்களின் தற்போதைய கல்வி செயற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த சந்திப்பில் விவாதிக்க இருக்கின்றோம்.

முக்கியமான விடயங்களை மக்கள் படுகின்ற துன்பங்களையும், கொரோனா தொடர்பில் தமது கவனத்தை செலுத்திக் கொண்டு இருக்கின்ற இலங்கை அரசாங்கம் எங்களுடைய மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது இருப்பது தொடர்பாகவும் நாங்கள் சுட்டிக்காட்ட இருக்கின்றோம்.

அந்த வகையில் பிரதமரின் அழைப்பை ஏற்று நாளை குறித்த விசேட கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கலந்து கொண்டு மேற்குறித்த விடயங்களை விவாதிக்க இருக்கின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.