பிரதமரின் நடவடிக்கை நியாயமற்றது! திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு

Report Print Murali Murali in அரசியல்
213Shares

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் அலரி மாளிகையில் கலந்துரையாடலுக்கு அழைத்திருப்பது அரசியல் அமைப்பிற்கு முரணான செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். குறித்த செயலானது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கட்சி தலைவர்களை மட்டும் அழைத்து, கலந்தாலோசித்து தேவையான முடிவுகளை எடுத்திருக்க முடியும். எனவும் அவ்வாறு செய்யவில்லை.

மாறாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் அலரி மாளிகையில் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளனர். இது அரசியல் அமைப்பிற்கு முரணான செயலாகும்.

எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு பொறுப்பான பிரதமர் எடுத்த இந்த நடவடிக்கை நியாயமற்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.