இலங்கை வரலாற்றில் மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா உயர் நீதிமன்றம்....?

Report Print Tamilini in அரசியல்
2327Shares

இலங்கை அரசியல் யாப்பு வரலாற்ரில் 19ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தினூடாக நடைமுறைக்கு வந்ததில் இருந்து அது தொடர்பில் முழுமையான தெளிவு பொதுவாக ஒருசில சட்டவாளர்களைத் தவிர வேறு யாரிடமும் இல்லை

எனவே இவ் 19ம் திருத்தச் சட்ட மூலமானது ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி சட்டவாக்க கழகமான பாராளுமன்றத்தில் மீ உயர் அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி முடிந்தவுடன் 19ம் திருத்தச் சட்ட மூலம் முழுமையாக நடைமுறைக்கு வருகின்றது.

அப்படி நடைமுறைக்கு வருகின்ற 19ம் திருத்தச் சட்டமூலம் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முழுமையான கட்டுப்பாட்டை விதிக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே தற்பொழுதான உச்சநீதிமன்றத்தினூடாக வழக்கு தாக்கல் முறை இடம்பெற்றுள்ளது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்பு ஏற்பாடுகளின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜூன் மாதம் 2ம் திகதிக்கு முன் நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் சிறிதளவேனும் இல்லை.

எனவே மார்ச் 2ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் விஷேட வர்த்தமானியை நீக்கும்படி உத்தரவிடக் கோரிய 7 அடிப்படை மனித உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்லது.

தற்போதைய சூழ்நிலையில் 7 வழக்குகளிலும் இந்த தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்களை மனுதாரர்களான முன்னாள் அமைச்சர்களான பாட்டலி சம்பிக ரணவக்க, குமார வெல்கம,சிரேஸ்ட ஊடகவியளாளர் விக்டர் ஜவன், ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன. பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் அரசியல் கட்சியான சமகி ஜனபல வேகயவும், மற்றும் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் உட்பட எட்டு இடையீட்டு மனுதாரர்களுமாக இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுதாரர்களுக்காக முன்னாள் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர்களான ஜனாதிபதி சட்டத்தரணிகள் இக்ராம் மொகமட் ஜிப்ர், அழகரட்னம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்ஜீவ ஜயவர்தன, ஆபிகாம் சுமந்திரன் சிரேஸ்ட சட்டத்தரணிகளான விரான் கொரியா, சுரேன் பெர்னான்டோ ஆகியோர் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுடைய வாதம் முழுமையடையாத சூழ்நிலையில் முதல்நாள் அமர்வை உற்றுநோக்கும்போது அடுக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதி பாராளுமன்றத்தை இயங்கவிடாமல் அல்லது பாராலுமன்றத்தின் செயற்பாடுகளை முழுமையாக தடுக்கின்றார் என்ற குற்றச்சாச்சு எழுகின்றது.

தற்போது இலங்கையில் இருக்கக்கூடிய 19ம் திருத்தச் சட்ட மூலம் பல்வேறுபட்ட துறைகள் சுயாதீன துறைகளாக இயங்குகின்றன. நீதிமன்ற கட்டமைப்புக்கூட இவ்வாறானதொரு நிலையிலேயே இருக்கின்றது. எனவே இன்றைய வழக்கின் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான, விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்பே இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

இதில் இருக்கக்கூடிய பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய இதற்கு முன்னர் சட்டமா அதிபராக திறம்பட சேவையாற்றியவர்.

அத்துடன் இவர் இப்போதிருக்கின்ற நீதிமன்ற கட்டமைப்பின் அடிப்படையிலும் இவர் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தக்கூடும் எனவும் ஒரு பாராளுமன்ற ஆட்சியை நோக்கியே இவரது தீர்ப்பு அமையலாம் எனவும் முன்னணி சட்டவல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரணம் 19ம் திருத்தச் சட்ட மூலம் எழுந்திருக்கக்கூடிய சட்டச் சிக்கலின் பிரகாரம் ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு எதிரான முடிவு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது இவருக்கு 5 வருட காலம் பிரதம நீதியரசராக பதவி வகிக்கக் கூடிய காலம் இருக்கின்றது.

எனவே இவருடைய காலம் அதிகம் இருப்பதாலும் இவருக்கு தற்போதைய சூழல் ஆரம்ப காலம் என்பதாலும் தன்னுடைய நடுநிலை தன்மையை முழுமையாக உறுதிப்படுத்தப்படவேண்டிய கடைப்பாடும் உள்ளது.

அதுமட்டுமல்லாது கடந்த வார பிற்பகுதியில் சஜித் பிரேமதாச தலமையிலான அணியினர் நிழல் அமைச்சரவை ஒன்றினையும் உருவாக்கி இருந்தனர்.

தற்போது இருக்ககூடிய அரச மட்டில் இந்த தீர்ப்பு தொடர்பில் 50 இற்கு 50 என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருக்கின்றனர்.

2019ம் ஆன்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட பாராளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையிலான இழுபறியின்போது இலங்கை வரலாற்றில் உயர் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றினை வழங்கி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு உத்தரவிட்டிருந்தது.

எனவே மேற்குறிப்பிட்ட இவ்வாறான சூழ்நிலையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வழக்கின் தீர்ப்புக்கூட மிகவும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக அமையலாம் என முன்னணி சட்டவல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே எழுதப்படும் தீர்ப்பை பொறுத்திருந்தே பார்க்கலாம்.....!