ஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி! - சுதா பகீர்த் தகவல்

Report Print Dias Dias in அரசியல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் சுமந்திரனால் களமிறக்கப்பட்டவர் அம்பிகா.

இவர் கடந்த ஜெனீவா பயணத்தின் போது அங்கு சிவில் சமூக பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்தார்.

அங்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர்களரோடு சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

அப்போது இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடிய வேளையில் ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை, இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களினூடாகவே நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தமை ஏனையோருக்கு வேடிக்கையாவே இருந்தது என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளரான சுதா தெரிவித்திருந்தார்.

லங்காசிறியின் 24 மணிநேர செய்திச் சேவையில் கலந்துகொண்டு இலங்கையின் இனப்படுகொலை தொடர்பிலும் மேலும் பல விடயங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.