ராஜபக்சக்களின் எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட அணிதிரள வேண்டும்! பி.ஹரிசன் அறைகூவல்

Report Print Rakesh in அரசியல்

ஜனநாயக ஆட்சியைப் புதைத்து விட்டு, எதேச்சதிகார ஆட்சியையே ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இந்த எதேச்சதிகார ஆட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பிணங்கள் மேல் ஏறியாவது பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து இந்தக் குறுகிய காலத்துக்குள் நாட்டு மக்களுக்கு இதுபோன்ற நெருக்கடியை ஏற்படுத்திவரும் தற்போதைய அரசாங்கம் போன்ற ஒரு அரசாங்கத்தை இதுவரையில் தான் பார்த்ததில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.