அரசாங்கத்திற்கும் சஜித் தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு? சந்தேகம் வெளியிட்டுள்ள ஐ.தே.க

Report Print Kamel Kamel in அரசியல்

அரசாங்கத்திற்கும் சஜித் தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏதும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது என முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பு அரசாங்கத்துடன் டீல் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எம்மவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் உண்மையில் யாருடன் டீல் உள்ளது என்பது மக்களுக்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் தரப்பின் ஊடக சந்திப்புக்களை நடாத்துவதற்கு அரசாங்கம் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தை வழங்கியுள்ளமை மூலம் இது புலனாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் தரப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தை வழங்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் சிறிகொத்தவின் அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக சிலர் சூளுரைத்தாலும் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் முதலில் கட்சி உறுப்புரிமையை மீள பெற்றுக்கொள்ள வேண்டுமென நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.