எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நிதியமைச்சின் அனுமதியைப் பெறத்தேவையில்லை

Report Print Ajith Ajith in அரசியல்

2003ம் ஆண்டு இந்தியன் எரிபொருள் நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி அந்த நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவேண்டுமாயின் இலங்கை நிதியமைச்சின் அனுமதியைப் பெறத்தேவையில்லை என்று பெற்றோலியத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

கிடைத்துள்ள தகவல்களின்படி ஐஓசி எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இலங்கையின் நிதியமைச்சுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

எனினும் 2003 உடன்படிக்கையின்படி ஐஓசி எரிபொருட்களின் விலை திடீரென அதிகரிக்கமுடியும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

எனவே தமது அமைச்சு இந்த விடயத்தில் தலையிடமுடியாது என்றும் அமைச்சர் கூறினார். இந்தநிலையில் குறித்த உடன்படிக்கை தொடர்பில் தமக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தாம் அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்பின்னரே உடன்படிக்கையில் திருத்தங்கள் எதனையும் மேற்கொள்ளமுடியுமா என்பதை ஆராயமுடியும் என்று அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ள நிலையில் ஐஓசி ஒக்டேய்ன் 92ரக பெற்றோலின் விலையை 5ரூபாவால் அண்மையில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.