5000 ரூபாய் நிதியுதவியை வழங்க வேண்டாம் எனக் கூறவில்லை - தேர்தல் ஆணைக்குழு

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜூன் மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் உத்தரவிடவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள கடிதத்தில் அப்படியான உத்தரவு காணப்படவில்லை என ஆணைக்குழுவின் திட்டப் பணிப்பாளர் சன்ன புஷ்பகுமார கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, நாட்டில் சாதாரண நிலைமை ஏற்பட்டு, அன்றாக பணிகளை செய்யக் கூடிய நிலைமை காணப்பட்டால், எதிர்வரும் ஜூன் மாதத்தில் நிதியுதவியை வழங்கும் உண்மையான தேவை இருக்குமா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு மாத்திரமே அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் நிலைமைக்கு மத்தியில் மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கும் வேலைத்திட்டத்தில் ஆளும் கட்சியின் அரசியல் பிரசார நடவடிக்கைகள் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனால், கிராமிய மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் தலையீடுகள் இன்றி, கிராம உத்தியோகஸ்தர்கள் உட்பட அரச தலைவர்கள் ஊடாக அந்த நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அந்த கடிதத்தில் கூறியிருந்தது.

இந்த நிலையில், மக்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதை நிறுத்துவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.