மீண்டும் வேட்புமனு கோரப்பட்டால் ஐ.ம.சக்தியும் ஐ.தே.கட்சியும் இணைந்து போட்டியிட வேண்டும்!நவீன் திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீண்டும் கோரப்பட்டால், பிரிந்து சென்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் மீண்டும் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நாடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சட்ட ரீதியான நிலைமை என்னவாகும் என்பதை சரியாக கணித்து கூற முடியாது. எனினும் வேட்புமனுக்கள் மீண்டும் கோரப்படுமாயின் இணைந்து போட்டியிட வேண்டும் என்பதே எனது நேர்மையான நிலைப்பாடு.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவால் பயன்பெற போவது ஐக்கிய தேசியக் கட்சியல்ல எனவும் வேறு கட்சிகளை சேர்ந்தவர்களே இதனால் பலன் பெறுவார்கள் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.