பொதுத்தேர்தல் திகதியை ரத்து செய்யக்கோரும் அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் விசாரணைக்கு

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுத்தேர்தல் திகதியை ரத்துச்செய்யக்கோரும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை ஐந்தாவது நாளாக இடம்பெற்ற போது சட்டமா அதிபர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் மன்றில் இன்று முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் இந்திக டெமுனி டி சில்வா வாய் மூலமாக இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

இதேவேளை மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, நடைமுறையில் தேர்தல் ஒன்றை நடத்த முடியும் என்று மன்றுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா மன்றில் தெரிவித்தார்.

பிரதிவாதிகளில் ஒருவரான ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தரவின் சார்பில் அவர் முன்னிலையாகி இதனை தெரிவித்தார்.