தேர்தல் ஆணைக்குழு தனது அதிகாரத்தை எதிர்க்கட்சியின் தேவைக்காக பயன்படுத்தக்கூடாது!ஆளும் கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை எதிர்க்கட்சிகளின் தேவைக்கு பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தேர்தல் ஆணைக்குழுவின் மீதான நம்பிக்கை சீர்குலைந்திருந்தது. கடந்த அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தாது ஒத்திவைத்து வந்திருக்கலாம் என எமக்கு தோன்றுகிறது.

எனினும் தற்போதும் கடந்த ஆட்சியாளர்களே தேர்தல் ஆணைக்குழுவை இயக்குகின்றனர் என்று மக்கள் உணர்கின்றனர்.சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை 9 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணைக்குழு தற்போது கூறுகிறது.

ஜூன் 20 ஆம் திகதி வரை ஒத்திவைத்தாகி விட்டது. தற்போதைய ஜனாதிபதி நாட்டில் இருந்து கொரோனா வைரசை ஒழிக்கும் வரை தேர்தல் ஆணைக்குழு காத்திருக்கின்றதா?

தற்போதைய ஜனாதிபதி தனது தலைமையின் கீழ் நாட்டுக்கு செய்ய வேண்டியதை செய்துள்ளார். சர்வதேசம் பாராட்டும் அளவுக்கு ஜனாதிபதியின் பணி அமைந்தது.

இதுவரை வெளி சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. PCR பரிசோதனை மூலம் இந்த விடயம் தெளிவாகியுள்ளது.

கடற்படை மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தினம் அடையாளம் காணப்படுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் தேர்தல் வேண்டாம் எனக் கூறி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளன.

தமது அதிகாரத்தை எதிராளிகளின் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம்.

தேர்தல் காரணமாக 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை வழங்குவதா இல்லை என்பதை பொருளாதார நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது.

50 ஆயிரம் பட்டதாரிகளின் பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்காக 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை கூட வழங்க முடியாதுள்ளது. ஒரு லட்சம் வேலை வாய்ப்பு திட்டமும் முடங்கியுள்ளது.

பதவி உயர்வு , இடமாற்றங்கள் நின்று போயுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவே இந்த அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியும்.மகிந்த தேசப்பிரிய, ரட்ணஜீவன் ஹூலை முன்னால் நிறுத்தி செயற்பட மாட்டார் என நாங்கள் நம்புகிறோம்.

அத்துடன் ஹூல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீளி தனது மகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைத்துச் சென்று தேர்தலை குழப்பும் நிலைமையை உருவாக்கினார்.

PCR பரிசோதனைகளில் ஆணைக்குழுவின் ஊழியர்களுக்கு கொரோனா பரவியுள்ளது என்று உறுதியானால், அது ஆணைக்குழுவுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும் எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.