ரட்னஜீவன் ஹூல் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியதில்லை! மஹிந்த தேசப்பிரிய மறுப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தனிமைப்படுத்தலுக்கு செல்லவேண்டியதில்லை. அவர் தேவையான தருணங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வந்துசெல்ல முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ரட்னஜீவன் ஹூலையும் லண்டனில் இருந்து வந்த அவரது மகளையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டிடத்தில் இருந்து வெளியேறுமாறு பணியாளர்கள் கோரினர் என்று வெளியான தகவலை மஹிந்த தேசப்பிரிய மறுத்துள்ளார்.

லண்டனில் இருந்து வந்த அவரது மகள் தனிமைப்படுத்தலுக்கு செல்லவில்லை என்ற காரணத்தினால் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அது உண்மைக்கு புறம்பான செய்தி என்று தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ரட்னஜீவன் ஹூலின் மகள் மே 4ம் திகதி இலங்கை வந்த நிலையில் நீர்கொழும்பு விருந்தகத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து சான்றிதழையும் பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ரட்னஜீவன் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடனேயே யாழ்ப்பாணம்-கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம்- கொழும்புக்கு ஆணைக்குழுவின் வாகனத்தை பயன்படுத்துவதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.