5000 ரூபாய் தொடர்ந்தும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் - ஐ.ம.சக்தி கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள உத்தரவை பயன்படுத்தி 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுவதை நிறுத்துவது என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் இயலாமையை எதிர்க்கட்சியின் மீது சுமத்த அரசாங்கத்தின் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் வேலைத்திட்டம் நீடிக்கப்பட வேண்டும். மக்களில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் இன்னும் வழமை நிலைமைக்கு திரும்பவில்லை.

இந்த வேலைத்திட்டத்தை அரசியல்மயப்படுத்துவதே பிரச்சினையே அன்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கப்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சினையில்லை. இந்த வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.