ரஞ்சன் ராமநாயக்க குற்றப்புலனாய்வுத் துறையில் வாக்குமூலம்

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று குற்றப்புலனாய்வுத் துறையில் வாக்குமூலம் ஒன்றை வழங்கினார்.

பௌத்த தர்மத்தை அபகீர்த்திக்கு உட்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவரிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் கணணி குற்றங்கள் தொடர்பான பிரிவு அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது.