மக்கள் பட்டினியில் வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர் - சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்
96Shares

ஆயிரம் ரூபாய் தருகிறார்கள் என்றதும் மக்கள் அந்த பணத்தை பெற வரிசையாக சென்று கூட்டத்தில் சிக்கி இறக்கும் நிலைமைக்கு நாடு சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் பட்டினியில் வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் தொழில்களை இழந்துள்ளதுடன், காது, கழுத்தில் இருக்கும் ஆபரணங்களை அடகு வைப்பதற்கும் வரிசையில் நிற்கின்றனர்.

அரசாங்கம் தற்போது வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை நிறுத்தினால், அது மிக மோசமான அநியாயம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.