வெளிநாட்டு உதவிகளில் அரசாங்கம் மக்களுக்கு நலன் வழங்கவில்லை!

Report Print Kamel Kamel in அரசியல்
32Shares

அரசாங்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகளில் அரசாங்கம் மக்களுக்கு நலன் வழங்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கிடைத்த உதவிகளை அரசாங்கம் மக்களுக்கு செலவிடாது, அதனைக் கொண்டு அரசாங்கம் ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அரசாங்கத்திற்கு வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளன. எனினும் அரசாங்கத்தின் தலைவர்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றனர். சில அமைச்சர்கள் களியாட்டங்களை நடாத்துகின்றனர், எனினும் அரசாங்கம் மக்களை சுரண்டுகின்றது.

சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் நபர்களுக்கு குறைந்தபட்சம் முகக்கவசம் வழங்கக்கூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாதுகாப்பு உபகரணங்கள், உணவு உள்ளிட்டன அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை, நாட்டின் செல்வந்தவர்களே வழங்கி வருகின்றனர். நாட்டின் அனைத்து மக்களினதும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆமைகளிடமிருந்து சிறகு எடுத்தாலும் ராஜபக்சக்களிடமிருந்து நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியாது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.