ஈஸ்டர் தாக்குதலை தடுக்காமைக்கான பொறுப்பை மைத்திரி ஏற்க நேரிடும்?

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2015 ஆம் ஆண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரச புலனாய்வு சேவையை தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்தார்.

தனது பொறுப்பின் கீழ் உள்ள பாதுகாப்புத்துறையை தற்காலிகமாகவேனும் வேறு தரப்பினருக்கு வழங்கவில்லை என்றால், அப்படியான சூழ்நிலையில் நடக்கும் எந்த சம்பவமாக இருந்தாலும் அது தொடர்பான முழுமையான பொறுப்பை முப்படைகளின் தளபதி அதாவது ஜனாதிபதி ஏற்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் நடந்த போது மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டில் தங்கியிருந்தார். அத்துடன் பாதுகாப்பு அமைச்சரான அவர், பதில் பாதுகாப்பு அமைச்சராக எவரையும் நியமித்திருக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில், ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதியால் வேறு தரப்பினர் மீது சுமத்த முடியாது எனவும் அந்த தாக்குதலை தடுக்காமல் போனமைக்கான முழுப் பொறுப்பையும் அவரே ஏற்க நேரிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.