தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் சம்பளத்தை இழந்து வேட்பாளர்களாக களமிறங்கிய அரச உத்தியோகத்தர்கள்

Report Print Theesan in அரசியல்

2020 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் , சுயேட்சை குழுக்களில் வேட்பாளர்களாக களமிறங்கி வேட்புமனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பலர் இன்று தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டு வருவதால் தமது சம்பளங்களை இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கொவிட் 19 கொரோனா நோய் தொற்று காரணமாக தேர்தல் இடம்பெறும் திகதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட 19.03.2020 தினத்திலிருந்து அரச ஊழியர்கள் சம்பளமின்றி வேலை செய்யும் விடுமுறையினைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள் தற்போது தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்படாத காரணத்தினால் தமது வேலைகளை தொடர முடியாமலும் சம்பளம் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் களமிறங்கும் அரச ஊழியர் ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் போது சம்பளமின்றி வேலை செய்யும் விடுமுறையினை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட முடியும் இவ்வாறு 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் போது பல அரச ஊழியர்கள் நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகளிலும், சுயேட்டைக் குழுக்களிலும் களமிறங்க வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

எனினும் தேர்தல் இடம்பெறும் திகதி அறிவிக்கப்படாமையால் தேர்தல் இடம்பெறும் திகதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் விடுமுறைகளும் காலவரையின்றி தொடர்ந்து செல்வதுடன், அவர்கள் தமது சம்பளத்தையும் இழந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.