பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளவர்களை ஒதுக்கித்தள்ளும்!

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுத்தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சியினரையும் தம்முடன் சேர்த்துக்கொள்ளும்.

எனினும் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளவர்களை ஒதுக்கித்தள்ளும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான துஷார இந்துனில் அமரசேன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை சஜித் பிரேமதாசவிடம் கையளிக்க அரசாங்கம் முடிவெடுத்தமைக் குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலேயே இந்துனில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கண்ணாடிக்கு முன்னால் சென்று தம்மை தாமே நவின் திசாநாயக்க பார்த்தால் யார் அரசாங்கத்துடன் தொடர்புகளை கொண்டிருக்கிறார் என்பது தெரியவரும் என்று இந்துனில் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரேமதாச ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாவை செலுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் வேட்புமனுக்கள் ரத்துச்செய்யப்பட்டால் ஐக்கிய தேசியக்கட்சியின் யாப்பை திருத்தி, ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடக்கூடிய நிலையை உருவாக்கவேண்டும் என்று நவீன் திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதில் வழங்கிய இந்துனில், சிலர் பழைய ஜனநாயகக்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை தமது சொத்தாக நினைத்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.