ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்குமிடையில் விசேட தொலைபேசி கலந்துரையாடல்

Report Print Ajith Ajith in அரசியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று காலை சுமார் 20 நிமிடம் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த கோட்டாபய ராஜபக்ச எடுத்துவரும் நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார்.

தெளிவான சிந்தனையும், கடுமையான தீர்மானம் நிறைவேற்றும் ஒருவராக கொரோனா கட்டுப்பாட்டு விடயத்தில் கோட்டாபய ராஜபக்ச நடந்துக்கொள்வதாக மோடி இதன்போது குறிப்பிட்டார்.

கலந்துரையாடலின் போது இருவரும் இருதரப்பு உறவுகள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

கொரோனாவுக்கு பின்னர் இலங்கையின் பொருளாதாரம் குறித்து கருத்துரைத்த கோட்டாபய ராஜபக்ச, நவீன தொழில்நுட்ப விடயத்தில் இந்தியாவின் பெறுமதிமிக்க முதலீடுகளை தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் நிலைமை சீரடைந்தததும் இலங்கைக்கான முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் இந்தியாவில் வீதி கண்காட்சிகள் நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.