இலங்கை மக்களின் பட்டினிச்சாவிற்கு மாளிகாவத்தையில் இடம்பெற்ற சம்பவமே உதாரணமாகும்!வேலுகுமார்

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கை மக்கள் எந்த அளவுக்கு பட்டினிச்சாவை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பது கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற சம்பவமே உதாரணமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பொதுத்தேர்தல் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

எமது செய்திப் பிரிவுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையானது அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதார மற்றும் கொவிட்-19 வைரஸ் ஒழிப்பு முயற்சிகளின் பிரதிபலனாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

5000 ரூபா நிவாரண உதவி அனைவருக்கும் சார்ந்ததாகும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கம் ஓரவஞ்சகம் செய்ததினாலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டில் அத்திட்டம் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த விதத்திலும் அச்சம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.