தேர்தலுக்கு முன் தேர்தல் ஒத்திகை!

Report Print Steephen Steephen in அரசியல்

கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆபத்து முற்றாக குறையவில்லை என்ற போதிலும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சுகாதார பாதுகாப்பு நிலைமை நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க அண்மையில் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.

இதற்கு அமைய தேர்தலை நடத்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அடுத்த வாரத்திற்குள் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் தேர்தல் ஒத்திகை ஒன்றை நடத்த சுகாதார துறையினர் தயாராகி வருகின்றனர்.

சுகாதார பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளை பாராமரிப்பது எப்படி, மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு முறைகள், அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள், சமூக இடைவெளியை பேணி வாக்களிப்பது எப்படி போன்ற விடயங்கள் சம்பந்தமாக இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.

இந்த தேர்தல் ஒத்திகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.