ரூபாவின் பெறுமதியை தக்க வைக்க 1.1 பில்லியன் டொலர் உதவி கோரும் கோட்டாபய

Report Print Ajith Ajith in அரசியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிடம் இருந்து 1.1 பில்லியன் டொலர்களை சலுகை உதவியாக கோரியுள்ளார்.

இலங்கையின் நாணய மாற்று விடயத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் முகமாக இந்த உதவி கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரி ஒருவரை நியமிகப்பதாக மோடி கோட்டாபயவுக்கு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சார்க் நாடுகளுக்கான உதவியளித்தல் திட்டத்தின் கீழ் 400 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க இந்தியா உறுதியளித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.