கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை பெற்றுக்கொள்ள இந்தியா முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in அரசியல்

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை பெற்றுக்கொள்வதற்கு இந்தியா முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

கொவிட் - 19 வைரஸ் தொற்று அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா, கொழும்பு துறைமுகத்தின் கிழக்குப் பகுதியை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கொரோனா பற்றி பேசிய போது, கொரோனாவிற்கும் தொடர்பு இல்லாத கொழும்பு துறைமுகம் பற்றியும் கலந்துரையாடியுள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி துறைமுகத்தின் கிழக்குப் பகுதியை இந்தியாவிற்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது எனவும், தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் எந்தவொரு பகுதியையும் வெளிநாடுகளுக்கு வழங்குவது உண்மையில் நாட்டை அடகு வைப்பதற்கு நிகரானது என அவர் தெரிவித்துள்ளார்.