பொதுத் தேர்தல் வெற்றிக்கு பின் மாகாண சபைத் தேர்தல்: ஜனக்க பண்டார

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்தி வெற்றி பெற்ற பின்னர் துரிதமாக மாகாண சபைத் தேர்தலையும் நடத்தி அதிலும் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இன்று முற்பகல் நடந்த திறப்பு விழா ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அன்று முதல் இன்று வரை தேர்தல்களுக்கு அஞ்சி வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்திலும் தேர்தல்களுக்கு அஞ்சியது.தற்போதைய அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி என்ற ஒன்று தற்போதில்லை. அந்த கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. ஆளும் கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. இதனை மக்கள் அறிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் என்பது உலகம் முழுவதும் தொற்றியுள்ள தொற்று நோய். எதிர்க்கட்சிகள் இந்த கொரோனா வைரஸை காட்டி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன எனவும் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.