கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையில் சரத் பொன்சேகா வாக்குமூலம்

Report Print Ajith Ajith in அரசியல்

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் தம்மால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையில் இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கம் வெளியிடும் தகவல்கள் பொய்யானவை என்றும் மக்களுக்கு பீதி ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்று கூறியும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை தாம் ஏனையவர்களுடன் பகிர்ந்துக்கொண்டதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் இது தொடர்பில் நடத்தியிருந்தார்.

இந்தநிலையில் இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட அவரிடம் ஒரு மணித்தியாலமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.