கொரோனா முடியும் வரை காத்திருந்தால் ஜனாதிபதியும், 14 அமைச்சர்களுமே நாட்டை ஆள நேரிடும்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்க்கட்சிகள் கூறுவது போல் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் முடிவுக்கு வரும் வரை தேர்தலை நடத்தாது இருந்தால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அமைச்சரவையில் உள்ள 14 பேருக்கும் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தை முன்னெடுக்க வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், எதிர்க்கட்சிகள் கூறுவது போல் தேர்தலை ஒத்திவைத்தால், அடுத்த ஆண்டே தேர்தலை நடத்த முடியும்.

அப்படியும் தேர்தலை நடத்த முடியாமல் போகலாம். நாம் கொரோனாவோடு வாழ வேண்டுமே அன்றி அது முடிவுக்கு வராது என்பதே சர்வதேச நிலைப்பாடாக உள்ளது.

அப்படி நடந்தால், கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் வரை ஜனாதிபதியும் அமைச்சரவையின் 14 பேரும் சதாகாலமும் நாட்டை ஆட்சி செய்ய நெரிடும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.