பிச்சை எடுத்தாவது ஹோமாகமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பேன்

Report Print Steephen Steephen in அரசியல்

ஹோமகமை சர்வதேச கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படுவதை தனது மனதில் இருந்து நீக்கவில்லை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் ஐந்து சதம் செலவில்லாமல், கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் பணத்தை பெறாமல் அந்த மைதானத்தை நிர்மாணிக்க தயார்.

எதிர்காலத்தில் வேறு ஒரு நாடு அல்லது நிறுவனத்திடம் இருந்து 30 மில்லியன் டொலர்களை பெற முடியும் என நான் நம்புகிறேன்.

பிச்சை எடுத்தாவது வேறு ஒரு நாட்டில் இருந்து பணத்தை பெற்று ஹோமாகமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிக்க போவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகமையில் சகல வசதிகளையும் கொண்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிக்க போவதாக அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் கூறியிருந்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினை காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலைமையில் கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படும் தீர்மானத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் வீரர்கள் உட்பட பலர் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்து அந்த திட்டம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார்.