மருத்துவச் சுற்றுலா என்ற பெயரில் கொரோனா நோயாளிகளை இறக்குமதி செய்யும் அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

மருத்துவச் சுற்றுலா எனக் கூறி அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்றிய சீசெல்ஸ் பிரஜைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கைக்கு கொரோனா நோயாளிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தவர்கள் சம்பந்தமாக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.

300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சீசெல்ஸ் நாட்டில் சிக்கி இருக்கும் போது, அரசாங்கம் அவர்களை பற்றி கவனத்தில் கொள்ளாது மருத்துவச் சுற்றுலா எனக் கூறி கொரோனா வைரஸ் தொற்றிய சீசெல்ஸ் பிரஜைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நோயாளிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து தேடி செய்தி வெளியிடுமாறு ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.