தேர்தலை நிச்சயமாக நடத்த வேண்டும்! பிரதமர் மஹிந்த ராஜபக்ச

Report Print Kamel Kamel in அரசியல்

தேர்தலை நிச்சயமாக நடத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இன்று முற்பகல் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குதான் தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதே தேர்தல் ஆணைக்குழுவின் கடப்பாடும் பொறுப்புமாகும்.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் தேர்தலை நடத்துமாறு கோரிய போதிலும் தற்பொழுது எதிர்க்கட்சிகளே தேர்தல் வேண்டாம் என கூறுகின்றன.

உண்மையில் இந்த கோரிக்கையின் உள் நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

ஏன் எதிர்க்கட்சிகள் தேர்தலைக் கண்டு அஞ்சுகின்றன என்பது மக்களுக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.