டிலான் பெரேராவின் தந்தை மரணம்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று முற்பகல் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊவா மற்றும் தென் மாகாண ஆளுநராக கடமையாற்றியுள்ள மார்ஷல் பெரேராவிற்கு 89 வயது பூர்த்தியாகியுள்ளது.

அத்துடன் மார்ஷல் பெரேரா, முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவின் தந்தையாவார்.

இவரது இறுதிச் சடங்குகள் பதுளையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.