நாங்கள் தொடர்ந்தும் ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள்: சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தாலும் தொடர்ந்தும் தமது அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு விசாரணைக்காக சென்றிருந்த போது வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடனேயே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளதால், அந்த கட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரச்சினையாக இருக்காது.

தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எனவும் இதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை நிறைவேற்றப்படாது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொன்சேகா,

நாடாளுமன்றம் இன்றி மூன்று மாதங்கள் நாட்டின் ஆட்சி முன்னெடுக்கப்படுமாயின் அது சட்டவிரோதம்.

நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது என நாட்டின் ஆட்சியாளர்கள் கண்டிப்பதாக கூறுவாயின் அதற்கு நாங்கள் இணங்க மாட்டோம். இதன் காரணமாகவே நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.