தேர்தல் ஆணைக்குழு ஜீவன் விவகாரத்தில் மௌனம் காப்பதாக CMEV குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in அரசியல்

தேர்தல் ஆணைக்குழுவும், காவல்துறைத் திணைக்களமும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமான் விவகாரத்தில் மௌனம் காத்து வருவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஜீவன் தொண்டமான் தேர்தல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

தந்தையின் சடலத்துடன் வாகனத் தொடரணியில் ஜீவன் பயணித்தமை தேர்தல் விதி மீறலாகும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக இடைவெளி பேணுவதனை உறுதி செய்வது காவல்துறைத் திணைக்களத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு பிரதமரிடம் அனுமதி கோரும் நபர், இவ்வாறு தேர்தல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.