ஐ.தே.கவின் ஆதரவுடனேயே ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கப்பட்டது: ஹர்ஷ

Report Print Ajith Ajith in அரசியல்

தமது புதிய முன்னணி ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவுடனேயே அமைக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து ஐக்கிய தேசிய சக்தியின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடும் 99 பேர் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தமது சட்டத்தரணிகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஸ்ரீகோத்தாவில் கூடிய ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுவே இந்த 99 பேரையும் கட்சியின் இருந்து நீக்குவதற்கான முடிவை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை தமது கட்சியின் அனுமதியின்றி ஏனைய கட்சிகளின் மூலம் போட்டியிடும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.