தமிழரசுக்கட்சிக்குள் முன்னாள் எம்.பி. சிவமோகன் பிரிவினையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு

Report Print Thileepan Thileepan in அரசியல்

வன்னித்தேர்தல் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழரசுக் கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதாக கட்சி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடு நாடாளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ள இந்த தேர்தலை தமிழர் தரப்பு ஓரணியில் நின்று முகம் கொடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இந்த செயற்பாடு கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் முகம் சுழிக்க வைத்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவமோகன் தனியார் வைத்தியசாலை ஒன்றை நிறுவி அதன் மூலம் இலாபம் ஈட்டி வந்த நிலையில் கூட்டமைப்பின் பங்காளியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக வடமாகாண சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் நாடாளுமன்ற தேர்தலிலும் அக்கட்சியூடாக போட்டியிட்டு வென்ற பின்னர் தமிழரசுக் கட்சிக்கு தாவியிருந்தார்.

தற்போது தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் முன்னாள் வடமகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆதரவாளர்கள், என பிளவுபடுத்த தனது ஆதரவாளர்களை இருந்து பிரித்து வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரிவினை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி வாக்கு வங்கி குறைவடைய கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சி ஆதரவாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே இது தொடர்பில் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.