சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் சுற்றுலாத்துறையை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இதனடிப்படையில் சிறியக்குழுக்களை இலங்கைக்கு அழைக்க தயார்நிலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முழுமையான சுகாதார ஒழுங்குவிதிகளின் கீழ் ஜூன் இரண்டாம் வாரம் முதல் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடியும் என்று சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டுக்குள் வருபவர்கள் கொரோhனா தொற்றாளி இல்லை என்பதற்கான சான்றை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தப்படுவார்.

விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகள் 6 மணித்தியாலங்கள் தங்கவைக்கப்பட்டு பீசீஆர் பரிசோதனைகள் நடத்தப்படும்.

இதற்காக கட்டுநாயக்க, மத்தளை விமான நிலையங்களில் ஆய்வுக்கூட வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

இதற்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஐந்து நட்சத்திர விருந்தகங்களில் மாத்திரமே தங்க வைக்கப்படுவார்கள்.

இலங்கையின் உள்ளூர் பேரூந்துகளில் பயணிகள் இவர்களுக்கு அனுமதியில்லை. இதேவேளை இந்தப்பயணிகள் நாளாந்தம் மருத்துவ ரீதியில் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஜூலை மாதத்தில் மேலும் சுற்றுலாப்பயணிகளை அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.