நாடு வழமைக்கு திரும்புகிறது! தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் - மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

கொரோனா வைரஸ் தொற்று நோய் நிலைமை காரணமாக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஓரளவுக்கு சீர்குலைந்தாலும் நாடு தற்போது வழமை நிலைமைக்கு திரும்பி வருவதால் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி அமோக வெற்றியை பெறும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.