சட்டப்படியே நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜனாதிபதி

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதியால் சட்டப்படியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது, இதை எவரும் எதிர்க்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டப்படியே நாடாளுமன்றத்தை கலைத்தார்.

இந்த நிலையில் பொதுத் தேர்தலுக்குப் பயந்த எதிரணியினர் ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவித்தலையும், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்த தேர்தல் திகதி வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது. பெரும்பாலும் எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய் தீர்ப்பு வரும் என்று நம்புகின்றோம்.

நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் நான்கரை வருடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முழு அதிகாரமும் ஜனாதிபதி வசமுள்ளது.

தேர்தலை வைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது. இதனை எவரும் எதிர்க்க முடியாது.

இந்தநிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.