கட்சிக்குள் எடுக்கும் தீர்மானம் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படும் - ரவி கருணாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி, கட்சிக்குள் எடுக்கும் தீர்மானத்தை மாத்திரமே நடைமுறைப்படுத்தும் என அந்த கட்சியின் உப தலைவரும், கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

தொலைநோக்கு பார்வையுடன் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தியுள்ள அனைத்து வேட்பாளர்களும் மிகப் பெரிய மக்களின் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.