அச்சிடப்பட்ட 74 பில்லியன் ரூபாய் பணத்திற்கு என்ன நடந்தது - ஐ.ம.சக்தி கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மத்திய வங்கி அண்மைய காலத்தில் அச்சிட்ட மற்றும் சந்தையில் புழக்கத்தில் விட்ட நாணயம் தொடர்பான உண்மையான தகவல்களை உடனடியாக நாட்டுக்கு வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களில் 74 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்து பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கல்கிஸ்சை கடற்கரை மணல் நிரப்பிய திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலைமை சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள அத்தநாயக்க, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னரே அந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.