முப்படையினர் மற்றும் பொலிஸாரின் கௌரவம் மலினப்படுத்தப்படுகிறது - ஐ.தே.கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

முப்படையினர் மற்றும் பொலிஸார், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வில் ஆபத்தை உண்டாக்கி, அவர்களின் தொழில் கௌரவத்தை மலினப்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல் தலையீடுகள் தொடர்பாக கடுமையான எதிர்ப்பை முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ருவான் விஜேவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டங்களில் முப்படையினர், பொலிஸார் அதிகாரிகளை ஈடுபடுத்தும் போது கையாள வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் சம்பந்தமாக தற்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையில், நாட்டின் சட்டம், படையினரின் தொழில் கௌரவம், அவர்களின் குடும்ப உறுப்பினர்களது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சி என்ற வகையில் இது சம்பந்தமாக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.