பொதுத்தேர்தலுக்கு எதிரான விசாரணை குறித்து நாளை நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தக்கூடாது என்று கோரும் மனுக்களின் விசாரணையை தொடர்ந்து முன்னெடுப்பதா? என்பது குறித்து உயர்நீதிமன்றம் நாளை பிற்பகல் 3மணிக்கு அறிவிக்கவுள்ளது.

இது தொடர்பான மனுக்களின் பூர்வாங்க விசாரணைகள் இன்று மாலை 5 மணியுடன் உயர்நீதிமன்றால் நிறைவு செய்ப்பட்டன.

இதனை அடுத்தே விசாரணைகளை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான அறிவிப்பை உயர்நீதிமன்றம் விடுக்கவுள்ளதாக சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட்ட 7 தரப்புகள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்களில் தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட்ட தரப்புகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.