சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து சம்பந்தமாக பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் வாகன விபத்து சம்பந்தமாக அப்போது வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய தற்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிடிவிராந்து ஒன்றை பெற்று அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி திஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்ததாக அன்றைய வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.