புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை கண்காணிப்புக்குழு கட்சி நடவடிக்கைகளை செயற்படுத்தும்! செந்தில் தொண்டமான்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை கண்காணிப்புக்குழு கட்சி நடவடிக்கைகளை செயற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஆலோசகர் முத்து சிவலிங்கம், உப தலைவர்கள்பி சிவராஜா, மாரிமுத்து மற்றும் செந்தில் தொண்டமான் மற்றும் நிதிச்செயலாளர் எம் ராமேஸ்வரன் ஆகியோரே கட்சியின் செயற்பாடுகளை ஒருங்கமைப்பர்.

கட்சியின் யாப்பின் படி தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை இந்தக்குழு கட்சி நடவடிக்கைகளை செயற்படுத்தும் என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.