தேர்தலை எப்போது நடாத்துவது என்பது குறித்து நாளை அறிவிக்கக் கூடிய சாத்தியமில்லை

Report Print Kamel Kamel in அரசியல்

தேர்தலை எப்போது நடாத்துவது என்பது குறித்து நாளை அறிவிக்கக் கூடிய சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடாத்துவது குறித்து சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படக்கூடிய ஆலோசனை வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணம் இந்த வார இறுதியிலேயே தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட உள்ளது.

தேர்தலை நடாத்துவது குறித்து அறிவிப்பதற்கு மாவட்ட பிரதி மற்றும் துறை தேர்தல் ஆணையாளர்களுடன் கலாந்தாலோசனை நடாத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயாதீன குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர், விருப்பு வாக்கு இலக்கங்கள் என்பன விரைவில் வர்த்மானியில் அறிவிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.